ஒரே நாளில் 2 புது படங்கள்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!
நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
ஆட்டோ டியூ கட்ட முடியாதவர்களுக்கு அதை கட்டுவது, ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், விவசாயிகளுக்கு ட்ராக்டர் என பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.
ஏற்கனவே லாரன்ஸ் தன் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புது அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

சொந்த தயாரிப்பில் 2 படங்கள்
ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பில் இரண்டு புது படங்கள் அடுத்து எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
படங்கள் பற்றிய அறிவிப்பு நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும் என அவர் கூறி இருக்கிறார்.
Hi friends and fans,
— Raghava Lawrence (@offl_Lawrence) May 15, 2024
I’m excited to share that 2 movies under Ragavendra productions will be announced tomorrow. pic.twitter.com/yjA52KdCVE
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri