பிச்சைக்காரனே என்னை விட அதிகம் சம்பாதிப்பான்.. விஜய் டிவி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்
சினிமாவுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். சின்னத்திரையில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்கும் பிரபலங்களுக்கு மிக அதிக அளவில் ரசிகர் பட்டாளமும் கிடைக்கிறது. அதே போல நடிகர்கள் சம்பளமும் அவர்கள் நடிக்கும் நாட்களை பொறுத்து வழங்கப்படும்.
இந்நிலையில் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் மாறன் என்கிற ரோலில் நடித்து வரும் ராகவேந்திரன் புலி தற்போது அந்த தொடரில் இருந்து இரண்டு மாதத்தில் வெளியேறிவிடுவேன் என தெரிவித்து உள்ளார்.
சீரியல் ட்ராக் மாறுவதால் தன் கதாபாத்திரம் தொடர்ந்து இருக்காது என தெரிவதாக அவர் கூறி உள்ளார். 15 வருடமாக இருந்த மீடியா துறையில் இருந்து வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ள அவர், இந்த முடிவை அதிகம் யோசித்து தான் எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
காற்றுக்கென்ன வேலி தொடரில் நடிப்பதற்காக சம்பளம் மிக மிக குறைவு என தெரிவித்து உள்ள அவர், 2 மாதங்களுக்கு முன் மாதம் 6000 ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றேன். அதன் பின் 3500 ரூபாய் ஒரு நாளுக்கு கொடுத்தார்கள்.
பிச்சைக்காரனே என்னை விட அதிகம் சம்பாதிப்பான். காற்றுக்கென்ன வேலியில் என் கதாபாத்திரம் போகும் விதத்தை பொறுத்து நான் தொடர்வதா இல்லையா என்பது தெரியும்.