இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமை.. எதற்கு தெரியுமா
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது.
குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது முக்கிய பெருமை ஒன்று கிடைத்துள்ளது.
கிடைத்த பெருமை
அதாவது, "இசை, நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான Trinity Laban MT கௌரவத் தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்". தற்போது, அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
