பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு, இந்த விஷயத்தை செய்வதை நிறுத்திவிட்டேன்! - ஏ. ஆர். ரகுமான் Review
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது, பொன்னியின் செல்வன்.
முக்கிய நட்சத்திரங்கள் பலரும் ஒன்றாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கின்றனர்.

அதன்படி நேற்று ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷனில் இயக்குநர் மணிரத்னத்தை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் அப்போது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பேசிய விஷயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அவர் கூறியதாவது “பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு, Netflix, Prime போன்ற OTT-களில் வெளிநாடு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகவும் தரமாக உள்ளது” என பேசியிருக்கிறார்.

மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா.. அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri