தனது இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு சீரியல் நடிகையை பின்தொடரும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்- யாரு தெரியுமா?
தமிழ் சினிமா கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் அடுத்து ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.
ஏ.ஆர். ரகுமான் சமூக வலைதளங்களில் நல்ல ஆக்டீவாக இருக்கிறார். இப்போது அவரது இன்ஸ்டா குறித்து ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் இன்ஸடாவில் ரகுமான் 64 பேரை பின்தொடர்கிறார் அதில் அவர் ஒரேயொரு சீரியல் நடிகையை பின்தொடர்கிறார்.
அவர் வேறுயாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் சுந்தரி தொடரில் நாயகியாக நடிக்கும் கேப்ரியல்லா தான்.
கேப்ரியல்லா மூப்பித்தா தமிழே தாயே என்ற பாடலில் ஏ.ஆர். ரகுமானுடன் பணிபுரிந்துள்ளார். அப்போது நடிகையுடன் ரகுமான் எடுக்கப்பட்ட புகைப்படம் கூட அவரது இன்ஸ்டாவில் பகிரப்பட்டது.
தற்போது ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் ஒரேஒரு சீரியல் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் கேப்ரியல்லா.