வடசென்னை ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகரின் மகன்! யார் தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை.
சிறந்த விமரசங்களை பெற்று வெற்றியடைந்த இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானது.
இதனிடையே வடசென்னை படத்தின் Prequel பாகத்தை வெப் சீரிஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ராஜன் வகையறா என உருவாகவுள்ள சீரிஸில் ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரை காட்சி படுத்த உள்ளாராம்.
இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கவுள்ளதாக கூறபடுகிறது, இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.