அண்ணாத்த படத்தின் இறுதி வேலையை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி, வெளியான லேட்டஸ்ட் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொல்கத்தாவில் நடக்கவிருந்த தனது படப்பிடிப்பை ரஜினி சென்ற வாரம் சென்னையிலே முடித்துள்ளார்.
ரஜினி தனது பணிகளை முடித்தவுடன் இயக்குனர் சிவா படக்குழுவுடன் கொல்கத்தா சென்று மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.