ரஜினியின் இந்த அசுர வளர்ச்சிக்கு இவர் தான் முதல் காரணம்.. இவர் மட்டும் இல்லனா..!

cinema rajinikanth raj bagathur
By Kathick Oct 25, 2021 01:10 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஓர் அடையலாம். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிவா இயக்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை திரையுலகில் பல சாதனையை படைத்துள்ளார். அதற்கெல்லாம் கௌரவிற்கும் விதமாக இன்று அவருக்கு தாத்தா தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் ஒரு காலத்தில் கண்டெக்டாராக இருந்த சிவாஜி ராவ்வை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஆனால், அப்போது ரஜினியுடன் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த பஸ் டிரைவரும், ரஜினியின் நண்பருமான ராஜ் பகதூர் அவர்கள் சமீபத்தில் தனது நண்பர் ரஜினியை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் " ஒரு நாள் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு நாடகத்தில் நடத்தித்தோம். அதில் ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அப்போது தான், நான் கூறினேன், நீ சென்னை போய், சினிமாவில் கலைகல்லூரியில் இணைந்துவிடு, உன் திறமை என்னவென்று உனக்கே தெரியவில்லை. ஆனால் அதற்கு ரஜினி, ' என்னிடம் அவ்வளவு வசதியில்லை' என்று கூறினாராம். எதுவேண்டுமானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தைரியமாக சென்னை புறப்படு " என்று ராஜ் பகதூர் கூறினாராம்.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US