முகத்தை முழுவதும் மூடிக்கொண்டு தியேட்டருக்கு வந்த பிரபல நடிகையின் கணவர்
சினிமா நட்சத்திரங்கள் வெளியில் வரும் போது அணிந்துவரும் உடை சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சில நடிகர்கள் வித்யாசமான உடைகளை அணிந்து வருவார்கள்.
ராஜ் குந்த்ரா
அப்படி பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா நேற்று பேட்மேன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தார். அவர் முகம் முழுவதும் மூடிக்கொண்டு வந்திருந்தது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் சிறையில் இருந்து சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகத்தை மறைக்கும் ஸ்வெட் ஷர்ட் அணிந்து வந்த ராஜ்குந்த்ரா கண்களுக்கும் கண்ணாடி போட்டு மறைத்துக்கொண்டார். வீடியோ இதோ..
பேட்மொபைல் கார்
மேலும் Heropanti இயக்குனர் அஹ்மத் கான் பேட்மொபைல் காரில் படத்திற்கு வந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.