ராசாகண்ணு மனைவிக்கு புதிதாக வீடு காட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! ஜெய் பீம் ஏற்படுத்திய தாக்கம்..
சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.
உண்மை சம்பத்தை மையாக வைத்து சித்தரிக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம், அனைவரிடமும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தை தயாரித்து நடித்ததற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு உண்மையில் காவலர்களின் கொடுமையால் உயிரிழந்த ராசாகண்ணுவின் மனைவிக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
அதன்படி ராசாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்தச்செலவில் வீடு கட்டி தருவதாக ராகவா லாரன்ஸ் உறுதியளித்துள்ளார்.
A house for Rajakannu’s family ?? #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021