உண்மையை மறைத்த சந்தியா, ஆனால் அடுத்து நடந்த அதிர்ச்சி! ராஜா ராணி 2ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
ராஜா ராணி 2ன் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் தற்போது மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சிவில் சர்விஸ் தேர்வில் ஜெயித்துவிட்ட சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங் செல்ல மாமியார் சிவகாமியின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.
மேலும் 5 லட்சம் பணத்தை ஹீரோவின் கடைசி தம்பி ஆதி தான் திருடினான் என்பதை சந்தியா ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார். அதை எல்லோரிடமும் சொல்லிவிடுவாரா என்கிற கேள்விக்கு தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் பதில் கிடைத்துவிட்டது.
உண்மையை மறைத்த சந்தியா! ஆனால்..
பணத்தை திருடியது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை என சந்தியா வேண்டுமென்றே பொய் சொல்கிறார். ஆனால் சரவணன் கோபமாக ஆதியின் சட்டையை பிடித்து தள்ளி மொத்த உண்மையையும் போட்டு உடைத்துவிடுகிறார்.
சந்தியாவிடம் ஆதி கெஞ்சியதை சரவணன் பார்த்துவிடுகிறார். அதை வைத்து தான் சரவணன் உண்மையை சொல்கிறார். அதன் பின் ஆதியும் உண்மையை ஒப்புக்கொள்கிறார்.
பிக் பாஸ் நடத்தும் சேனலை விளாசிய பிரபல நடிகை! வெடித்த சர்ச்சை