ராஜா ராணி 2ல் வரும் ட்விஸ்ட்! வில்லனாக மாறும் முக்கிய கதாப்பாத்திரம்

Raja Rani 2 Vijay Tv
By Parthiban.A Jan 13, 2022 01:20 PM GMT
Report

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். ஆல்யா கர்பமாக இருக்கும் நிலையிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஹீரோ சரவணன் சூப்பர் செஃப் போட்டியில் ஜெயித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கும் நிலையில் தற்போது தொடரில் வில்லனாக கிட்டத்தட்ட மாறிவிட்டார் சரவணனின் கடைசி தம்பி ஆதி. கூட்டு குடும்பத்தில் அவர் மட்டும் அதிகம் சுயநலமாக இருப்பது போல ஏற்கனவே காட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது அவர் அப்பா ஒரு 100 ருபாய் கேட்டதற்காக மிகவும் அசிங்கப்படுத்தி பேசி இருக்கிறார்.

அப்பா ரோலில் நடித்து வரும் சைவம் ரவி அது பற்றி இன்ஸ்டாகிராமில் ஆதங்கமாக பதிவிட்டு இருக்கிறார். அந்த நூறு ரூபாயை நான் ஜிபே பண்ணிடுறேன் என ஆதி ரோலில் நடிக்கும் பிரதோஷ் பதில் கூறி இருக்கிறார்.

மேலும் ஆதி விலையுயர்ந்த gadgets மீது அதிகம் ஆசைப்படுவது போல காட்சி இன்றைய எபிசோடில் வர இருக்கிறது. அதனால் அவரால் தான் அடுத்த பிரச்சனை ராஜா ராணி 2ல் வர போகிறது என எதிர்பார்க்கலாம். அர்ச்சனா ஒருபுறம் இருந்தாலும் இனி ஆதி தான் மெயின் வில்லனாக மாற போகிறாரோ?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US