அர்ச்சனாவை அடித்த செந்தில்.. ராஜா ராணி சீரியலில் இருந்து வெளியான ஷாக்கிங் வீடியோ
சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில், ஆல்யா மானசாவிற்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார். இவர்களை போல், ராஜா ராணி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் தான், அர்ச்சனா மற்றும் செந்தில்.
கதைப்படி கடந்த எபிசோடில், அர்ச்சனா தனது கணவர் செந்திலின் தங்கையை தவறான விஷயத்தில் சிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால், அதனை ஆல்யா மானசா, மற்றும் சித்து இணைந்து தடுத்துவிட்டனர்.
எப்படியோ இந்த விஷயத்தை கேள்விப்படும் செந்தில், தனது மனைவி கோபத்துடன் அடிக்கிறார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள அந்த காட்சியின் வீடியோவை பார்த்த சிலர் ஷாக்காகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், ரசிகர்கள் பலர், அந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..