ஆல்யா மானசா வெளியேற்றம், உள்ளே வரும் புதிய நடிகர்- யாருனு பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா நடித்துவந்த தொடர் ராஜா ராணி 2. இந்த தொடர் தியா அவுர் பாதி ஹம் என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் தான்.
கதையில் மாற்றம்
இந்த தொடர் ஆரம்பத்தில் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்தார், ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடிக்கிறார். காரணம் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருந்தது.
ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நேற்று தகவல் வந்த நிலையில் அவர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சந்தியாவாக நடிக்க வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இனி சந்தியாவாக நடிக்க போவதில்லை என உறுதிப்படுத்திவிட்டார்.
புதிய நடிகர்
நடிகை ரியாவை தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் ஒரு புதிய வரவு. அதாவது காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலாவின் நண்பராக நடித்த ஒருவர் இப்போது ராஜா ராணி 2 தொடரிலும் வர இருக்கிறாராம்.
அவர் யார் என்பது இதோ புகைப்படத்தில் காணுங்கள்,
Oscars விருது பெற்ற கலைஞர்கள் யார் யார்?- வெளிவந்த முழு விவரம்