ராஜா ராணி சீரியல் நடிகர் சித்து இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா.. புகைப்படத்துடன் இதோ
நடிகர் சித்து
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.
இதில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் சித்து. இவர் இதற்க்கு முன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
அதே சீரியலில் கதாநாயகியாக நடித்த நாடியை ஸ்ரேயாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.
இத்தனை திரைப்படங்களா
தற்போது ராஜா ராணி சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகர் சித்து தமிழில் வெளிவந்த வல்லினம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஆம், இப்படம் மட்டுமின்றி குற்றம் கடிதல், பீச்சாங்கை, அகோரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்து வல்லினம் திரைப்படத்தில் நடித்த காட்சியின் புகைப்படம் மட்டும் கிடைத்துள்ளது. அந்த புகைப்படம் இதோ..
