கர்ப்பமாக இருக்கும் பிரபல ராஜா ராணி சீரியல் நடிகை, தனது கணவருடன் நடந்த அழகிய போட்டோ ஷூட்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து சீரியல் பக்கம் வந்த நடிகை ஸ்ரீதேவி சன் டிவி-யில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு’ சீரியல் தான் ஸ்ரீதேவி நடித்த முதல் சீரியல்.
அதன் பிறகு தொடர்ந்து சீரியல்களில் கவனத்தை செலுத்திய ஸ்ரீதேவி தமிழ் மற்றும் தெலுங்கில் 25-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து முடித்து விட்டார்.
மேலும் தற்போது இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலிலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தான் கர்பமாக இருப்பதாக அறிவித்த ஸ்ரீதேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும் தற்போது கர்பமாக இருக்கும் ஸ்ரீதேவி தனது கணவருடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.





அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
