ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜா-ரூபி ஜோடி யூடியூப் வருமானம்.. எவ்வளவு தெரியுமா?
வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஒரு சிறந்த முடிவு தான் யூடியூப். தங்கள் வீட்டில் நடப்பது, மக்களுக்கு தெரியாத விஷயம் காண்பிப்பது என யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு பலர் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், யூடியூப் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன ஒரு ஜோடி குறித்து தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அவர்கள் தான் ராஜா ரூபி யூடியூபர்.
ராஜா ரூபி:
ராஜா ரூபி என்பது ஒரு யூடியூப் சேனல். இந்த சேனல் ஒரு ஜோடியின் குடும்ப விவரங்களையும், நகைச்சுவையான வீடியோக்களையும் உள்ளடக்கியது.
ராஜா மற்றும் ரூபி தம்பதியினர் தங்களுடைய குடும்ப நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், அன்றாட வாழ்க்கையைப் பற்றிய வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ராஜா ரூபி தம்பதியினரின் நகைச்சுவை வீடியோக்கள் பொதுவாக பொழுதுபோக்கு மற்றும் குடும்ப நட்புடன் இருக்கும். இதனால் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இந்த ஜோடி வலம் வருகின்றனர்.
குடும்பம்:
ராஜா தான் இந்த யூடியூப் சேனலின் முக்கிய நபர், இவருடைய மனைவி தான் ரூபி. இவரும் ராஜாவுடன் இணைந்து வீடியோக்கள் செய்து வருகிறார். இந்த ஜோடிக்கு சாய்ஸ்ரீ என்ற ஒரு மகள் உள்ளார்.
வருமானம்:
ராஜா ரூபி youtube சேனல் 3.88 மில்லியன் subscribers கொண்டுள்ளது. மேலும், இந்த யூடியூப் சேனலில் இதுவரை 1.1K வீடியோஸ் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜா ரூபி youtube சேனல் நெட் ஒர்த் குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க. இந்த Youtube சேனலின் மொத்த நெட் ஒர்த் $ 1.25M - $ 7.52M இருக்கும் என கூறப்படுகிறது.