நடிகர் பிரபாஸ் நடித்த ராஜா சாப் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்... எவ்வளவு கோடிகள் தெரியுமா
ராஜா சாப்
இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் ராஜா சாப்.

இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
நஷ்டம்
பிரபாஸ் இதற்கு முன் ஆதி புருஷ் என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். இப்படத்தின் தோல்வியின் காரணமாக ரூ. 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை சரிசெய்யதான் ராஜா சாப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், தற்போது ராஜா சாப் படமும் படுதோல்வியடைந்த நிலையில், ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இப்படியொரு தகவல் திரையுலக வட்டாரத்தில் உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.