ராஜவம்சம் திரைவிமர்சனம்
சசிகுமார் நடிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் நிக்கிகல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா, நிரோஷா என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்து திரையரங்கில் வெளியாகியுள்ள படம் ராஜவம்சம். கிராமத்து கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்த சசிகுமார், சென்னையில் ஐ.டி. துறையில் வேலை செய்து வருகிறார். அங்கு சசிகுமாருக்கு மிக பெரிய Project கொடுக்கப்படுகிறது. தனது கனவு Project-டாக நினைத்து மிகுந்த கவனத்துடன் இந்த வேளையில் களமிறங்குகிறார் சசிகுமார்.
இன்னொரு புறம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணமா, இல்லை தன்னுடையாக கனவு Project-டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இந்த கஷ்டமான சூழ்நிலையில் சசிகுமார் எடுத்த இறுதி முடிவு என்ன? அதனால் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை..
படத்தை பற்றிய அலசல்
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில், நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
க்ளாப்ஸ்
சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பு
கதிர் வேலு இயக்கம்
பல்ப்ஸ்
குடும்ப உறவுகள் சுற்றியே உள்ளதால் இளைஞர்களை பெரிதாக கவரவில்லை.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது ராஜவம்சம்
2.5 / 5

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu
