1 லட்சம் கூட சினிமாவில் சம்பாதிக்க முடியல.. தேவயாணியின் கணவர் தொடங்கிய தொழில்
நடிகை தேவையணியின் கணவர் ராஜகுமாரன் பிரபல இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். பல படங்களை இயக்கிய ராஜகுமாரன் தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
ராஜகுமாரன் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் தற்போது நடித்து வருகிறார்.
40 வருஷம்.. 40 லட்சம் கூட கிடைக்கல
இந்நிலையில் ராஜகுமாரன் தன்னால் சினிமாவில் எதுவும் சம்பாதிக்க முடியவில்லை என கூறி ஒரு கடை போட்டு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்.
அவரது தோட்டத்தில் விளைந்த பொருட்களை மதிப்புக்கூட்டி அவர் விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க புது நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடந்தபோது, அங்கு ராஜகுமாரன் ஸ்டால் போட்டு வியாபாரத்தை தொடங்கிவிட்டார். அது ஏன் என கேட்டதற்கு..
"40 வருஷமா சினிமாவில் இருக்கிறேன், வருஷம் 1 லட்சம் என மொத்தமா 40 லட்சம் கூட எனக்கு கிடைக்கல. அதனால தான் இந்த தொழில் செய்கிறேன்" என ராஜகுமாரன் கூறி இருக்கிறார்.