ஜெயிலர் படம் கொடுமையா இருந்துச்சு.. சகிக்க முடியவில்லை.. இயக்குநர் ராஜகுமாரன் ஓபன் டாக்
ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2023ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ஜெயிலர். இப்படம் உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ராஜாகுமாரன்
இந்நிலையில், ஜெயிலர் படம் குறித்து பிரபல இயக்குநர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் கடுமையாக பேசியுள்ளார். அவர் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதில், "ஜெயிலர் படம் பார்த்தேன், பார்க்கவே கொடுமையா இருந்தது. பாதி படத்திலேயே ஓடி வந்துவிடலாமா-னு ஆகிடுச்சு, சகிக்க முடியவில்லை. இதில் ரூ. 600 கோடி வசூல் பண்ணிவிட்டது என்று சொல்கிறார்கள். நீங்க ப்ளூ பிலிம் எடுத்தா கூடத்தான் நல்ல வசூல் பண்ணும். இதில் பார்ட் 2 வேற எடுக்கிறார்கள். அந்த படம் மூலம் ரஜினி மக்களுக்கு என்ன சொல்லிவிட்டார். பணம் வர வேண்டும், சம்பளம் வர வேண்டும், திரையரங்களுக்கு பணம் வர வேண்டும் என்று படங்கள் பண்ணிட்டு இருக்கிறார்" என பேசியுள்ளார்.