எனக்கு தாமரை செல்வியை 10 வருடத்திற்கு முன்பே தெரியும்! - சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி சொன்ன ரகசியம்..
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நெருங்கி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான தாமரை செல்வி மிகவும் வலுவான போட்டியாளராக திகழ்ந்து வருகிறார். இவரும் இறுதி போட்டிக்கு முன்னேறுவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான பாடகி ராஜலக்ஷ்மி பேட்டி ஒன்றில் தாமரை செல்வி குறித்து பேசியுள்ளார்.
அதில் ராஜலக்ஷ்மி "எனக்கு தாமரை செல்வி அக்காவை பத்து வருடத்திற்கு முன்பே தெரியும், மேடை நிகழ்ச்சிகள் பண்ணும் போதே தாமரை செல்வி அக்கா எனக்கு பழக்கம்.
அதற்கு பிறகு அவர்களை நான் பார்க்கவே இல்லை, ஆனால் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நாம தாமரை அக்கா வந்துருக்காங்க, என சந்தோஷமாக இருந்தது" என பேசியுள்ளார்.