வாரிசு
தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித்- விஜய். இவர்களின் திரைப்படம் இன்று மாபெரும் வரவேற்புடன் வெளியானது.
வாரிசு படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் உள்ள வா தலைவா பாடலில் முதல் வரியை பிரபல நாட்டுப்புற பாடகி ராஜாலட்சுமி பாடியுள்ளார். ஆனால் credits-ல் அதில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து பேசிய ராஜாலட்சுமி, " வா தலைவா பாடலில் ராப் ராக் பாட தான் என்னை அழைத்தார்கள். நானும் அவர்கள் கூறியவாறு பாடிவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் நான் பாடிய சில வரிகள் 'வா தலைவா' பாடலில் இடம் பெறாது என்று நினைத்து விட்டேன்.
இசை வெளியீட்டு விழா
ஒரு நாள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலை பாடும் படி என்னை அழைத்தார்கள். ஆனால், இது யாரோ நம்மளை கலாய்க்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.
மேலும் அவர்கள் அழைத்த நேரத்தில் எனக்கு வேறு வேலை இருந்ததால் அவர்களின் அழைப்பை நிராகரித்து விட்டேன். பின்னர் இசை வெளியீட்டு விழாவில் நான் பாடிய பாடல் இருந்தது.
இதை பார்த்த பிறகு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இசை வெளியீட்டு விழாவில் பங்கு பெற முடியாததனால் வருத்தம் இருந்தது. 'வா தலைவா' பாடலில் என் பெயர் வரவில்லை, ஒரு வேலை படத்தில் என்னுடைய பெயர் வரும் என்று நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
