அறிவே இல்லையா?..அந்த மாதிரி டிரஸ் போடுறது என் இஷ்டம்!! கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

By Dhiviyarajan Feb 12, 2024 02:01 AM GMT
Report

ராஜலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் ராஜலட்சுமி. இதையடுத்து இவருக்கு பல படங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்தது.

குறுகிய காலத்திலேயே பிரபலமான ராஜலட்சுமி தற்போது திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடித்துள்ள லைசன்ஸ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா,வையாபுரி, நமோ நாராயணன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அறிவே இல்லையா?..அந்த மாதிரி டிரஸ் போடுறது என் இஷ்டம்!! கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி | Rajalakshmi Senthilganesh Talks Negative Comment

அறிவே இல்லையா?

சமீபத்தில் வெளிநாட்டில் இசைக் கச்சேரிகாக சென்று இருந்த ராஜலட்சுமி, அங்கு வசிக்கும் ஒரு நபருடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். மேலும் அந்த வீடியோவில் ராஜலட்சுமி மாடர்ன் உடையில் இருந்ததால் நெட்டிசன்கள் மோசமாக கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ராஜலட்சுமி, ஆங்கிலத்தை நமக்குள்ளே பேசினால் தவறுகள் தெரியாது அதனால் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன். நான் பேசியதை மட்டுமின்றி நான் அணிந்து இருந்த உடையை குறித்தும் மோசமாக கமெண்ட் செய்து இருந்தார்கள்.

அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள். எனக்கு எது சரியாக இருக்கோ அதை நான் போடுகிறேன். எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன் என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.  

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US