ராஜமௌலி இயக்கிய இரண்டு பிரமாண்ட திரைப்படங்கள், இந்த ஹாலிவுட் படங்களின் அட்டர் காப்பியா.. அதிர்ச்சி தகவல்
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி
தெலுங்கு திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் ராஜமௌலி.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த வெளிவந்த நான் ஈ, மாவீரன், பாகுபலி, ஆர். ஆர். ஆர் என பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் ஒன்று நான் ஈ. சமந்தா மற்றும் நாணி இணைந்து நடித்து வெளிவந்த இப்படம், தென்னிந்திய அளவில் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்த இரண்டு படங்கள் காப்பியா
இந்நிலையில், சூப்பர்ஹிட்டான 'நான் ஈ' திரைப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த 'காக்ரோச்' படத்தின் காப்பி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி இதன்பின் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படமும் ஹாலிவுட்டில் வெளிவந்த தி லைன் கிங் படத்தின் காப்பி தான் என்பதுபோல் கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களும் ஒரே கதைக்களத்தில் அமைந்துள்ளதால், ராஜமௌலி இயக்கிய நான் ஈ மற்றும் பாகுபலி இரண்டும் காப்பி என்று கூறுகின்றனர்.