ரூ. 1800 கோடி வசூல்.. பாகுபலி 3 எடுக்க முடிவு செய்த ராஜமௌலி..
எஸ்.எஸ். ராஜமௌலி
இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் தற்போது பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் உலகளவில் ரீச் பெற்றது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடல் ஆக்ஸர் விருது பெற்ற இந்திய சினிமாவிற்கு பெருமையும் சேர்த்து. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாகுபலி 3 குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி என்று சொன்னால் அனைவரும் முதலில் நினைவுக்கு வரும் விஷயமாக மாறிவிட்டது பாகுபலி திரைப்படம்.
பாகுபலி 3
2015ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்ற கேள்வி பாகுபலி 2 படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி 2 உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. இந்த நிலையில், மகேஷ் பாபு உடனான படத்தை முடித்துவிட்டு பாகுபலி 3 படத்தை இயக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளாராம்.
பாகுபலி படத்தை தற்போது கார்ட்டூனில் வெளியிடவுள்ளனர். இந்த சூழலில் தற்போது பாகுபலி 3 படத்தை எடுக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளது ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளரான அந்தணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
