எனக்கே பொறாமையா இருக்கு.. பாகுபலி இயக்குனர் ராஜமௌலியே கூறிய விஷயம்
சமீப காலத்தில் மலையாள படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது.
அதனை தொடர்ந்த பிரேமாலு படம் வரும் மார்ச் 15ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படம் ஏற்கனவே 100 கோடி வசூலித்து சாதனை படைத்த படம் தான்.
சமீபத்தில் தெலுங்கில் டப் ஆகி ரிலீஸ் ஆன பிரேமாலு படத்திற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. நடிகர் மகேஷ் பாபு ட்விட்டரில் படத்தை பாராட்டி தள்ளி இருக்கிறார்.
ராஜமௌலி பேச்சு
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பிரேமாலு படத்தை பார்த்துவிட்டு நடிகை மமிதா பைஜூவை பாராட்டி இருக்கிறார். அவரை சாய் பல்லவி உடன் ஒப்பிட்டு பாராட்டி இருக்கிறார் ராஜமௌலி.
"பொறுமையுடனும், வலியுடனும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன். மலையாள சினிமா துறை சிறந்த நடிகர்களை உருவாக்குகிறது. இந்த படத்திலும் சிறப்பான பணியை செய்து இருக்கிறார்கள்" என ராஜமௌலி கூறி இருக்கிறார்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
