ராஜமௌலி மகேஷ் பாபு படத்தின் மாஸ் அப்டேட்.. வெறித்தனமான மாஸ் போஸ்டர் வெளிவந்தது
SSMB29
நான் ஈ, பாகுபலி, RRR போன்ற மாபெரும் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் SSMB29. இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன்மூலம் முதல் முறையாக ராஜமௌலியுடன் கைகோர்த்துள்ளார் மகேஷ் பாபு. மேலும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மாஸ் போஸ்டர்
மாபெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், The First Reveal in November 2025 #GlobeTrotter என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் First Reveal நவம்பர் மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The First Reveal in November 2025… #GlobeTrotter pic.twitter.com/MEtGBNeqfi
— rajamouli ss (@ssrajamouli) August 9, 2025