500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் அடுத்த பட கதை என்ன தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் S.S.ராஜமௌலி, மேலும் வசூலிலும் இவரின் திரைப்படங்கள் தான் தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அப்படி பாகுபலி படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் RRR.
பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் வெளியானது, எப்போதும் போல இந்த RRR திரைப்படமும் உலகமுழுவதும் 1000 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.
அடுத்த பிரமாண்டம்
இதனிடையே அடுத்து SS ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக, இதுவரை இல்லாதளவு மிக பெரிய பொருட்செலவில் அப்படம் உருவாகவுள்ளது.
கிட்டத்தட்ட அப்படத்தின் பட்ஜெட் 500 கோடி இருக்கும் என்றும், அப்படம் புதையலை வைத்து மையமாக எடுக்கப்பட்ட படம் எனவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆப்பிரிக்கா காடுகளில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதன்முறையாக வெளியான நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை புகைப்படம்- இதோ பாருங்கள்