இந்த தமிழ்ப் படத்தைப் பாருங்கள்.. அமெரிக்கர்களுக்கு இயக்குனர் ராஜமௌலி பரிந்துரை
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்தது. மேலும் அந்த விழாவில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியை புகழ்ந்து தள்ளினார்.

தமிழ் படம்
இந்நிலையில் ராஜமௌலி, தி நியூயார்க் இதழில் பேட்டி அளித்துள்ளார். அப்போது தொகுப்பாளர் நியூயார்க்கர்கள் பார்க்க வேண்டிய இந்தியத் திரைப்படங்களை பரிந்துரையுங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு அவர், சங்கராபரணம், முன்னா பாய் எம்.பி.பி.எஸ், பண்டித் ஃகுயீன், ப்ளாக் ப்ரைடே மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தையும் கூறியுள்ளார்.

ஈரோடு மகேஷா இது, தனது மனைவியுடன் அவர் எடுத்த செம மாடர்ன் போட்டோ ஷுட்- இதோ பாருங்க