RRR 2ம் பாகம் கேட்ட நடிகர்: ஆனால் ராஜமெளலி இப்படி சொல்லிட்டாரே
எஸ்எஸ் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் தற்போது உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று ஹிந்தியில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் சில முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
வட மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருந்த பென் நிறுவனம் தான் இந்த வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமீர் கான், கரண் ஜோகர், ஜாவித் அக்தர் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
அப்போது பேசிய ஜூனியர் எண்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் ஆர் ஆர் ஆர் அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் ராஜமெளலி, ‘இன்னும் சில காலம் ஆகட்டும். அது எனக்கும் மகிழ்ச்சி தான். அது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டும் என்பதால் அல்ல, என் தம்பிகள் (என்டிஆர், ராம் சரண்) உடன் அதிக நேரம் செலவிடலாம் என்பதால் தான். ஆனால் அதற்கும் நேரம் வரட்டும்’ என தெர்வித்துள்ளார்.
அதனால் RRR அடுத்த பாகம் தொடங்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என தெரிகிறது.