ஆர்ஆர்ஆர் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பீஸ்ட் உடன் மோதலா?
இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர் ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவது மற்றும் 50% இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டது. அதனால் ஆர்ஆர்ஆர் தள்ளிப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. நிலைமை சீரானால் மார்ச் 18ம் தேதி படம் வெளிவரும் அல்லது ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவரும் என தெரிவித்து உள்ளனர்.
விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆர்ஆர்ஆர் படம் பீஸ்ட் உடன் மோதலை தவிர்த்து இருக்கிறது.
இதேபோல அஜித்தின் வலிமை படமும் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
#RRRMovie on March 18th 2022 or April 28th 2022. 🔥🌊 pic.twitter.com/yoGxM1WcYm
— DVV Entertainment (@DVVMovies) January 21, 2022