எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படை பேச்சு
வாரணாசி
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என பல வெற்றிப்படங்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இயக்குநர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடவுள் நம்பிக்கை இல்லை
இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ராஜமௌலி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் கடவுள் நம்பிக்கை குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அனுமன் தான் என்னை வழிநடத்துகிறார் என தந்தை கூறுவார். என் மனைவியும் அனுமன் பக்தை, அனுமனை அவரது நண்பர் போல் நினைத்து அவருடன் பேசி கொண்டிருப்பார். அவர்களை நினைத்தால் எனக்கு கோபமாக வரும்" என பேசியுள்ளார்.