பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக வெளியாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..

Bahubali Director SS Rajamouli RRR eagerly awaited movie will be released on Oct 13th 2021
By Balakumar Jan 26, 2021 02:36 PM GMT
Report

இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது.

என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது.  

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US