அஜித் மற்றும் விஜய்யை வைத்து ஹாலிவுட் திரைப்படம் போல் உருவாக்க உள்ள இயக்குனர் ராஜிவ் மேனன், அவரே கூறிய தகவல் இதோ..

Vijay Ajith Rajeev Menon
By Balakumar Jan 04, 2021 02:55 PM GMT
Report

இயக்குனர் ராஜிவ் மேனன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராகவும் மற்றும் இயக்குனராகவும் உள்ளவர், இவர் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் மின்சார கனவு என்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்தது.  

கடைசியாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் இவர் இயக்கத்தில் சர்வம் தாள மயம் திரைப்படம் வெளியானது, அதுமட்டுமின்றி புத்தம் புது காலை என்ற Anthology படத்தில் ஒரு பகுதியை இவர் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் தல அஜித் மற்றும் திரிஷாவை வைத்து 'Django Unchained' என்ற ஹாலிவுட் படத்தை போல ஒரு படத்தை இயக்க விரும்புவதாகவும்.  

மேலும் தளபதி விஜய் மற்றும் நடிகை நயன்தாராவை வைத்து 'Inception' போல ஒரு திரைப்படத்தை இயக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US