கருப்பு பணம் வாங்கியதாக பேட்டி ஒன்றில் கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினி, அரிதான வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே தற்போது ரஜினி அளித்துள்ள பழைய பேட்டியொன்றின் வீடியோ ட்விட்டரில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அதில் ரஜினி தான் ஆரம்ப காலத்தில் கருப்பு பணம் வாங்கியது குறித்தும், ஜெயலலிதா குறித்தும் பேசியுள்ளார்.
மேலும் அப்போது அவருக்கு இருந்த தைரியம் இப்போதுள்ள நடிகர்களுக்கு இருக்காது எனவும் அவரின் ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து கூறிவருகின்றனர்.
Very Rare video..
— தூத்துக்குடி ஜெபா ?? (@Samuelclicks) November 6, 2021
1996 சம்பவம் ?..அப்போ சர்வ வல்லமை பொருந்திய முதல்வர் ஜெயலலிதா'வை ரஜினி சமாளித்த விதம்..
ஊடகங்களுக்கு முன்னால் நடந்த தவறுகளை ஒப்பு கொள்ளும் விதம் @rajinikanth ?
த்த்தா இப்போ உள்ள சுள்ளா பசங்களுக்கு லாம் இது எப்படி தெரியும்..
( Part 1 ) pic.twitter.com/awEq9BIlA8