அண்ணாத்த திரைப்படத்தை முடித்தவுடன் ரஜினி செய்யவுள்ள முக்கிய விஷயம், என்ன தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதன்பின் ரஜினி ஜுனில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் சென்னையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
