கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!! ரஜினிகாந்த் சொன்ன விஷயம் இதுதான்..
கூலி
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அந்த டீசரில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் வரும், வா வா பக்கம் வா பாடலை மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பாடலை இளையராஜா இசையமைத்து இருந்தார்.
ரஜினி பேட்டி..
இந்த நிலையில் தனது பாடலை உரிய அனுமதி பெறாமலும், ராயல்டி செலுத்தாமலும் பயன்படுத்தியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் மும்பையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
அப்போது அவரிடம், இளையராஜா கொடுத்த நோட்டீஸ் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
