பிரபல மலையாள நடிகரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..
ரஜினியின் ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடிப்பார் என தகவல் பரவி வந்தது.

கதை கேட்ட ரஜினி
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் பிரபல மலையாள நடிகரிடம் கதை கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆம், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ப்ரித்விராஜ் அவரின் திரைப்பட வெளியிட்டிற்காக பேட்டிளித்து வருகிறார்.
அப்படி அவர் அளித்திருந்த பேட்டியொன்றில் “எனக்கு வந்த பெரிய வாய்ப்புகளில் ஒன்று ரஜினி சார் என்னிடம் கதை கேட்ட அழைத்தது தான். அப்போது நான் ரொம்ப பயந்துவிட்டேன்.
அவரின் படத்தை மிக பெரிய பொறுப்பு, மக்களுக்காக இல்லையென்றாலும் என்னுள் இருக்கும் ரசிகனுக்கான பொறுப்பு, ஏன்னென்னறால் நான் அவரின் மிக பெரிய ரசிகன். நான் அவரை வைத்து இயக்கும் திரைப்படம் என்னுள் ரசிகனை ஏமாற்றிவிடக்கூடாது.
மேலும் ப்ரித்விராஜ் ரஜினியிடம் “இப்படியொடி வாய்ப்பு வந்ததை நான் மறக்கவே மாட்டேன், ஒரு நாள் உங்களுக்கு கதை சொல்ல தெரியம் வந்தால் கண்டிப்பாக உங்களிடம் வந்து ஒரு 2 மணி நேரம் கேட்டு கதை சொல்லவேன்” என பேசியுள்ளார்.

ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan