வயது குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? ரஜினி கொடுத்த விளக்கம்
ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அதனை தொடர்ந்து வட இந்தியாவில் பாஜக-வை சேர்ந்த பல அரசியல்வாதிகளை சந்தித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்து பேசி இருந்தார். அப்போது ரஜினி அவரது காலில் விழுந்த வீடியோ வைரல் ஆகி நெட்டிசன்கள் ரஜினியை அதிகம் ட்ரோல் செய்தனர்.
ஜெயிலர் படத்தில் அவ்வளவு மாஸாக நடித்துவிட்டு, இப்படி காலில் விழுகிறாரே என நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கின்றனர். மேலும் கபாலி பட காட்சிகளையும் பதிவிட்டு ரஜினியை விமர்சித்து இருந்தனர்.
ரஜினி விளக்கம்
இந்நிலையில் இது பற்றி ரஜினி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "என்னை விட வயது குறைவாக இருந்தாலும் சந்நியாசி காலில் விழுவது என் வழக்கம். அதைத்தான் செய்தேன்" என கூறி இருக்கிறார்.
மேலும் ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும் கூறி இருக்கிறார்.
கார்த்தி இல்லை.. 'நான் மகான் அல்ல' படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர்தான்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
