பண்டிகைக்கு வெளியாகும் ரஜினியின் கூலி.. ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட்
ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை அனிருத் இசையமைத்து வருகிறார். பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் முதலில் மே தினத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வெறித்தனமான ட்ரீட்
அதாவது, கூலி படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிக வசூல் கிடைக்கும் என்ற காரணத்தினால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri