நடிகர் ரஜினிக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் காலமானார் !
தீவிர ரசிகரான ரஜினி முத்து
நடிகர் ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் அமைத்த ரஜினியின் தீவிரமான ரசிகர் ரஜினி முத்து என்று அழைக்கப்படும் ஏ.பி.முத்துமணி.
தற்போது முத்துமணி அவர்கள் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி மதுரை மக்களையும் சோகமாக்கியுள்ளது.
மேலும் இவருக்காகத்தான் `முத்துமணிச்சுடரே வா' என்ற பாடலை ரஜினி எழுத வைத்தாகவும், தன் படத்துக்கு முத்து என்று பெயர் சூட்டியதாகவும் ரஜினி ரசிகர்களிடையே சொல்லப்படுகிறது.
அவருக்காக ரஜினி செய்த விஷயம்
அதுமட்டுமின்றி கடந்த 2020 ஆம் ஆண்டு அன்று இதே முத்துமணி அவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது ரஜினி அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து இருந்தார்.
ஆனால் தற்போது முத்துமணி மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, ரஜினி அவர் இருக்கும் அன்ஸீன் புகைப்படத்தையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
Thalaivar wishes for #Muthumani Anna's speedy recovery....
— Thalaivar Defence Team (@MannanRajini) September 22, 2020
Muthumani Anna was the first person to start fans club to #Thalaivar pic.twitter.com/y2ZJyDuZuu