மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் தற்போதைய நிலை இதுதான்.. வெளிவந்த அறிக்கை
நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் தீடீரென பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவர் செக் அப்கிற்காக தான் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஆனால், இன்று காலை நடிகர் ரஜினிக்கு இதயத்தில் சிறு கோளாறு இருப்பதாக ஷாக்கிங் நியூஸ் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்தியை குறித்து அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் " நடிகர் ரஜினிகாந்த் வேகமாக குணமடைந்து வருகிறார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது " என்று அறிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.