தளபதி விஜய்யுடன் இணையும் ரஜினி, கமல், அஜித், சூர்யா? இந்த கூட்டணி சூப்பாரா இருக்கே
ஜனநாயகன்
தளபதி விஜய் தற்போது அரசியலில் முழுமையாக களமிறங்கிவிட்டார். சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், மோனிஷா, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தில் பொதுச்செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ ஆகியோர் பத்திரிக்கையாளராகாக ஜனநாயகனில் வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இசை வெளியீட்டு விழா
இந்த நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் மலேசியாவில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித் குமார் மற்றும் சூர்யா ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மாபெரும் நிகழ்ச்சியாக ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.