நடிகர் ரஜினிக்கும், லதாவிற்கும் இப்படி தான் காதல் மலர்ந்தது.. அழகிய ஜோடியின் திருமண கதை
நடிகர் ரஜினிகாந்திற்கும், லாதாவிற்கும் கடந்த 1981ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தை ஒரு முறை பேட்டி எடுப்பதற்காக வந்தவர் தான், லதா. இவர் இயக்குனர் மகேந்திரனின் உறவினர் என்பதால் ரஜினியை பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பேட்டியின் போது, லதாவை முதல் முறையாக பார்த்த ரஜினிகாந்த், அங்கேயே லதாவின் மீது காதல் கொள்கிறார். பின்பு ரஜினியும், லதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கியுள்ளனர்.
இதன்பின், லதாவை திருமணம் செய்ய முடிவெடுத்த நடிகர் ரஜினிகாந்த் தனது குருநாதர், இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் லதாவை அழைத்து சென்று, நான் காதலிக்கும் பெண் இவர் தான், இவரை தான் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு, மகிழ்ச்சியடைந்த கே. பாலச்சந்தர், இனி தான் உனக்கு மிகப்பெரிய பொறுப்பு வரப்போகிறது என்று கூறி, ரஜினி - லதா இருவரையும் வாழ்த்தியுள்ளார்.
இதன்பின், ரஜினிக்கும் - லதாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இப்படி தான், ரஜினி - லதாவின் காதல் கதை உருவாகியுள்ளது.