28 வருடங்களுக்கு பின் ரஜினி உடன் கூட்டணி சேரும் நட்சத்திரம்! அடுத்த படம் இவருடன் தானா?
28 வருடங்களுக்கு பின் ரஜினி மற்றும் இளையராஜா கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூப்பர்ஸ்டார் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் இப்போது இருக்கும் பெரிய கேள்வியாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது.
அவருக்கு கதை சொல்லி காத்திருப்பதாக பல முன்னணி இயக்குனர்களின் பெயர்களும் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினியை சமீபத்தில் சந்தித்து ஒரு கதை சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனி கம், பா, ஷமிதாப் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கும் பால்கி தற்போது ரஜினி உடன் சேர்ந்தால் படம் இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இளையராஜா தான் இசையமைக்க போகிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.
இது மட்டும் நடந்தால் ரஜினி - இளையராஜா கூட்டணி 28 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.