வீட்டின் முன் கூடிய ரசிகர்கள், திருமண நாளில் ரஜினி செய்த சூப்பர் விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர்கிறார். அந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்து இருக்கின்றனர்.
மறுபுறம் ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை விவாகரத்து செய்ததும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனால் ரஜனி கடும் வருத்தத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் - லதா ஜோடி தங்கள் திருமண நாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிகம் வாழ்த்து குவிந்து வருகிறது. மேலும் ரஜினி வீட்டின் முன்பும் அதிகம் ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள்.
அவர்களுக்காக ரஜினி வெளியில் வந்து கேட் அருகில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி கூறி இருக்கிறார். வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thalaivar @rajinikanth Dharishanam ???#Rajinikanth #Thalaivar169 pic.twitter.com/xcbEaW7tA9
— Rajini STR Fans (@RajiniSTRFans) February 26, 2022