சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் தவறவிட்டு, பின்பு வேறொருவர் நடித்து சூப்பர்ஹிட்டான படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.
தீபாவளி அன்று வெளியான இப்படம் , தற்போது வசூலில் வேட்டையாடி வருகிறது. ரஜினியின் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதே போல் சில படங்கள் தோல்வியையும் தழுவியுள்ளது.
ஆனால், ரஜினிகாந்த் நடிக்காமல் தவறவிட்டு சூப்பர்ஹிட் ஆன திரைப்படங்களும் இருக்கிறது. அப்படி ரஜினிகாந்த் தவறவிட்டு சூப்பர்ஹிட்டான படங்களில் ஒன்று தான், ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா.
இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, ரஜினிகாந்த் தானாம். அப்போது சில காரணங்களால் ரஜினிகாந்தால் நடிக்கமுடியாமல் போனதாம்.
பின்பு இப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி படமும் சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.