ரஜினியுடன் மோதும் ரித்திக் ரோஷன்.. ஜெயிக்கப்போவது யார்?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வர, அனிருத் இசையமைக்கிறார். ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மோதல்
இந்நிலையில், ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக வார் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அயான் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் 2ஆம் பாகம் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
இதனால், இந்த இரண்டு படங்களும் மோதிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
