பைசன் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.. மாரி செல்வராஜ் பதிவு
பைசன்
கடந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் பைசன்.
இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
ரஜினிகாந்த் பாராட்டு
இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் மாரி செல்வராஜை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், பைசன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.
"சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" என ரஜினி கூறியதாக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2025
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன்… pic.twitter.com/QrNiTitvgB